ஆதரவு நீங்க இயேசுவே
aadharavu neenga yesuvae
ஆதரவு நீங்க இயேசுவே -என் வாழ்க்கையில் ஆறுதல் நீங்க இயேசுவே -(2) இருளில் தீபம் நீரே கருவினில் கண்டவரே -(2) ஆதரவே... ஆறுதலே... ஆண்டவரே ...(2)
அன்னை தந்தை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை நேசித்தவர் வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லை-(2) பெரியதே... மிகசிறந்ததே... உம் அன்பே... (2)
ஒருவரும் உடனில்லை எல்லோரும் கைவிட்டார்கள் கர்த்தரோ துணைநின்று கரத்தால் தாங்கினீர்-(2) இரட்சித்தீர்... காப்பாற்றி னீர்... நன்றி ஐயா-(2)
மாறா மதுரமாகும் நம்பிக்கை இழக்காதே மறவாத தேவன் உண்டு மனமடிவாகாதே-(2) உதவுவார்... உயரர்த்துவார்... உடன் இருப்பார்... (2)