ஆதாரம் நீயே அருட்கடலே
aadhaaram neeyae arutkadalae
ஆதாரம் நீயே அருட்கடலே உந்தன் பாதாரம் தொழுதேன் பரம்பொருளே
சிலுவையில் தொங்கும் சிகப்பு நிலாவே மறுபடி உதிப்பாயா கொலுவினில் தூங்கும் அமைதிப் புறாவே மறுபடி உயிர்ப்பாயா மறுபடி உயிர்ப்பாயா
பிரபஞ்சத்தின் உறக்கங்கள் கலைக்கும் உன் அடக்கம் பிரசன்னத்தில் துயில் மீண்டு எடுப்பேன் நான் ஜனனம் பூக்கும் மணமெல்லாம் உன் காலை வானம் பார்க்கும் இடமெல்லாம் என் தேவகானம்
பனித்துளி குடங்கள் பூக்களின் தலையில் ஒளித்துளி நீ வருக வந்து ஒளி முத்தம் நீ தருக விழித்துளி விழுந்து வழித்தடம் அழிந்து மழைத்துளி நீ விழுக விழுந்து அகத்தினில் கரைந்திடுக கவித்துளி பொழிந்தேன் கன்னித்தமிழ் புனைந்தேன் உயிர்த்துளி நீ எழுக - எழுந்து ஜதியினில் உயிர்த்திடுக ஜதியினில் உயிர்த்திடுக
தூங்கும் நீதி எங்கே துயில் எலும் நாள் வேண்டும் தாகம் நிலம் மீது அமைதியின் துயில் வேண்டும் தூங்கும் நீதி எங்கே துயில் எலும் நாள் வேண்டும் தாகம் நிலம் மீது அமைதியின் துயில் வேண்டும் மனிதன் தோலைத்த மானுடம் முடிவாகும் புனிதம் நிலைத்த புது யுகம் விடிவாகும்
கடலின் கால்களில் அலைகள் சலங்கை வா என் கல்கலிலே அந்த வனவில் சலங்கைகலோ மலையின் கால்களில் அவ்ருவிகள் சலங்கை இலை என் கல்கலிலே அந்த இலைக்கல் சலங்கைகலோ நிலத்தின் கால்களில் ஓடைகள் சலங்கை கிழகின் கல்கலிலே அந்த சூரியன் சலங்கைகலோ சூரியன் சலங்கைகலோ