ஆதாரம் நீர்தானய்யா
aadhaaram neerdhaanayyaa
ஆதாரம் நீர்தானய்யா எந்தன் துணையுமே நீர்தானய்யா உம்மை துதி பாடி போற்றியே மகிமை செலுத்திடுவேன்
உமக்கு நன்றி, நன்றி ஐயா உமக்கு ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் ஐயா உமக்கு மகிமை, மகிமை ஐயா உமக்கு புகழ்ச்சி, புகழ்ச்சி ஐயா
1. என்னோடு என்றென்றும் இருப்பீரய்யா எந்நாளும் குறை நீக்கி காப்பீரய்யா
2. தீங்குகள் அணுகாமல் காத்தீரய்யா நன்மைகள் அனுதினம் செய்தீரய்யா
3. வார்த்தையாம் இயேசுவை அளித்தீரய்யா பாவங்கள் நீங்கியே போனதய்யா
4. ஆவியால் தினம் என்னை நிரப்பினீரே எந்நாளும் தங்கியே தேற்றினீரே
5. நல் பாத்திரமாய் என்னையும் வனைந்தீரய்யா உம் போல என்னையும் மாற்றுமய்யா
6. ஆழ்கையில் என் குரலை கேட்டீரய்யா கரம் தாங்கி என்னையும் தூக்கினீரே
7. சோதனை நேரத்தில் துணை நீரய்யா வழுவாமல் தினம் காத்து ஜெயமீந்தீரே
8. இப்பூவில் எந்தனை படைத்தீரய்யா உம் துதி சொல்லி பாடி மகிழ்ந்திடவே