ஆச்சரிய கிருபை அதிசயம் அதன் தொனி
aacchariya kirubai adhisayam adhan thoni
ஆச்சரிய கிருபை அதிசயம் அதன் தொனி நீச பாவியாம் எனை மீட்டதே தொலைந்து போன என்னயும் தேடி அன்பாய் கண்டதே குருடன் நான் இப்போது காண்கிறேன்
கிருபையே என் உள்ளம் பயந்திட போதித்ததே கிருபையே என் பயம் நீக்கிற்றே விலையேறப் பெற்றதாய் தோன்றுதே உம் கிருபை நான் உம்மை நம்பின அந்நேரமே
அபாயங்கள் சூழ்ச்சிகள் கஷ்டங்கள் யாவினூடாய் ஏராளமாய் கடந்து நான் வந்திட்டேன் கிருபையே தம் மறைவினில் என்னையும் காத்ததே கிருபையே அக்கரை சேர்த்ததே
அக்கரை சேர்கையில் பதினாயிரம் வருடங்கள் பிரகாசிப்போம் நீதியின் சூர்யனால் கர்த்தரைப் பாடியே போற்றுவோம் ஏகமாய் முன் என்றும் இல்லாத மகிழ்ச்சியாய்