ஆ இயேசுவே புவியிலே
aa yesuvae puviyilae
1. ஆ, இயேசுவே, புவியிலே இருந்திரக்கமாக அடியாரை அங்கும்மண்டை இழுத்துக்கொள்வீராக.
2. இழும், இழும், அடியார்க்கும் பரகதி அளியும்; அப்போதெல்லா உபத்ரவ வருத்தமும் முடியும்.
3. நீர் எங்களை சேர்த்தும்மண்டை போம் பாதையில் நடத்தும்; அடியார் கால் தப்பாய்ப் போனால் நீர் மோசத்தை அகற்றும்.
4. இவ்வுலகம் ஆகா இடம் இழும்; அடியார் தேடும் இடம் பரம்; அங்கும்மிடம் நீர் கொண்ட பேரைச் சேரும்.
5. நீர் ரட்சகர், நீர் மீட்டவர் நீரே இம்மானுவேலும், இரட்சியும், இழும், இழும்; இவ்வேண்டுதலைக் கேளும்.