ஆ சுந்தர வீடே என் சோபித வீடேஎன்றும்
aa sundhara veedae en sobidha veedeendrum
ஆ சுந்தர வீடே என் சோபித வீடேஎன்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்
1. மாமகிமையாம் மனோகரமாய் தேவன் திருகை நிர்மாணித்ததாம் சேருவேனே சொர்காலயமே
2. மின்னுதே ஈராறு வாசல்களும் விண்ணுலகில் நித்திய ஆலயத்தில் சௌபாக்கியமே நான் வாழ்ந்திடுவேன்
3. சீர் எழும் பொன்திரு வீதிகளால் பேர் பெறும் சுந்தர வீடதையே இதோ தூரத்திலேஅதைக்காண்கிறேன் நான்
4. குரோதனம் வேதனை ஏதுமில்லை இராப்பகல் வேற்றுமை அங்கேயில்லை தேவாட்டுக்குட்டி தீபமாகிடுவார்
5. கூடுதே இரத்தசாட்சி சங்கம் பிதாவின் முன்னில் சர்வ சித்தருமாய் ஆத்ம நேசர் கண்ணீர்தாம் துடைப்பார்
6. தூதர் அல்லேலூயா பாடிடுவார் தூதர் பொன் வீணைகள் மீ;ட்டிடுவார் ஆ கீத நாதம் இதோ கேட்கிறதே
7. பாவ சரீரமும் மாறிடுமே இராஜன் இயேசுவை காண்பதற்காய் நான் போவதாலே என்ன ஆனந்தமே