ஆ சிந்திக்கவே
aa sindhikkavae
ஆ! சிந்திக்கவே பரதேசிகள் வெறும் அந்நியர் நாமிப் பூவில் நிலையில்லா வாசம் தானே
1.தினம் கானம் முழக்கியே பாடிடுவோம் பக்தர் பாதையை நோக்கியே ஓடிடுவோம் - பரி தாம மகன்று நாம் வாழ்ந்திடுவோம் - பரலோகம் பரனேசு வோடு கூட ஆ!
2.பல துரோகம் நமக்கெதிர் வந்திடுமே - நிலை கெட்டவர் போல் பலர் எண்ணிடவே - பரன் தொட்டணைத்து நமைதேற்றிடவே பிரியநாதன் பரலோகம் கொண்டு ஏக- ஆ!
3.பல பாடுகள் பட்டு நாம் ஏக வேண்டும் - சில காடுகள் மேடுகள் தாண்ட வேண்டும் - பல ராலும் பல துயர் ஏற்றிடவே ஒரு நாளில் பிரியனோடு கூட வாழ - ஆ!
4.இனி ஒன்றும் நமக்கிங் கில்லையே - நமக் குள்ள தோர் வாசம் மேலல்லவோ - ஹா மின்னும் பிரஜோதியாம் மாபெரும் கோபுரம் விண்ணில் நம் கண்கள் கண்டிடுதே - ஆ!
5.இம்மாயபுரியை விட்டேகிடலாம் - ஜல்தி சீயோன் பயணம் தொடர்ந்திடலாம் - நேச ரோடொருமித்து சுகித்திடலாம் நித்திய காலம் இன்பமாயென் பாக்கிய நாட்டில் - ஆ!
6.பெருந்திண்டி, வெறி, இச்சை விட்டு விட்டு கன பாரங்கள் யாவுமே நீக்கிவிட்டு - நல்ல போராட்டத்தோடு நாம் ஓட்டமோடி முடிவாக்கி ஜீவகிரீடம் சூடி வாழ -ஆ !