ஆ சர்வ பூமியின்
aa sarva poomiyin
1. ஆ! சர்வ பூமியின் மகிழ்ச்சியுமான வடிவின் மேன்மையும் ஸ்தானமும் உள்ளதாம் வட திசையில் உள்ள சீயோன் பர்வதம் மா மகா ராஜனின் திவ்விய நகரமே
ஆ! என்ன இன்பமே சீயோனின் வாசமே! எண்ணிடும் நேரம் எந்தன் உள்ளம் பொங்குதே என் நேசர் இயேசுவோடு என்று சேர்வேனோ சேவித்து நேசித்திடவே
2. ஆ! என்ன ஆச்சர்யம்! சீயோனின் சந்ததி அற்புதமாம் மாந்தரை அன்பினால் தேடியே மெல்கிசேதேக் முறைமையில் வளர்ந்துமே தேவ குமாரனின் சாயலாக மாற்றுவார் - ஆ! என்ன
3. ஆ! என்ன ஆனந்தம்! சீயோன் பாதை வேதியராயினும் திசை கெட்டிடாதே சஞ்சலம் தவிப்பும் முற்றும் அகற்றியே மகிழ்வுடன் என்றும் தூய பாதை செல்வர் - ஆ! என்ன
4. ஆ! என்ன அற்புதம்! சீயோன் பர்வதத்தில் ஆவி ஆத்துமாவின் மறுரூபமானார் சேனையின் கர்த்தரால் ஜெயமெடுத்தோராய் தேவ சிங்காசனம் சேர்ந்தென்றும் ஆளுவார் - ஆ! என்ன
5. ஆ! என்ன பாக்கியமே! சீயோனின் சொந்தமே மாந்தரினின்றுமே மானிலம் நின்றுமே தந்தைக்கும் ஆட்டுக்குட்டியானவர் க்குமா முதற்பலன்கள் மீட்டெடுக்க பட்டோர் - ஆ! என்ன