ஆ நிலையில் புல்லணையில் அவதரித்த
aa nilaiyil pullanaiyil avadharitha
ஆ நிலையில் புல்லணையில் அவதரித்த சீலேனே- அரையில் நீதியாடையணி அருமை மரியாள் பாலனே
இரட்சிப்பென்னும் பாதையணிந்த நிமல சேனை கர்த்தனே (2) நிச்சய வைராக்கிய சால்வை நித்தியமணி சித்தனே (2)
ஆயர்களால் அளித்த வெள்ளை தயிர்பால் உண்ட ஆயனே அன்பர்களை காக்கும் எங்கள் அரிய தேவ சேயனே
தன் மகிமையை மறந்தே தன் குலத்தில் ஏழையாய் தான் உதித்து சத்தியத்தின் சாட்சியாக வாழியே
வந்தனம் சொல் வந்தனம் என்று ஆடிப்பாடி மகிழுவோம் வந்த வான தேவசேயை கூடித் தேடி வணங்குவோம்