ஆ நாயகா நான் உம்மோடே
aa naayagaa naan ummodae
1. ஆ! நாயகா நான் உம்மோடே தாழ் பாதையில் செல்லட்டும் உம் வேலையில் எத்தீங்கையும் சகிக்கும் வகை போதியும்.
2. என் அன்பின் சொல்லால் நித்தமும் மந்தமுள்ளோரை ஏவவும் விழுவோரை நான் தாங்கவும் மோட்சம் சேர்க்கவும் போதியும்.
3. விஸ்வாசம் ஓங்கும் வேளையில் ஜெயங் கொள்ளும் நம்பிக்கையில் உம்மோ டெந்நாளும் தங்கவும் உம் வழிகளைப் போதியும்.
4. விசாலமாய் என் பாதையில் வெளிச்சம் வீசும் மனதில் உம் சமாதானத்தில் என்றும் உம்மோடு நான் பிழைக்கட்டும்.