ஆ இவ்வேழைக்கும் இரங்கும்
aa ivvezhaikkum irangum
1. ஆ! இவ்வேழைக்கும் இரங்கும் என்னைப் பாரும் என்னில் எங்கும் நோவும் ரோகமும் உண்டே பாவக் குஷ்டம் முற்றும் நீங்கக் கையை நீட்டித் தொடுமே! சருவாங்க சொஸ்தமாக நீர் கடாட்சம் செய்யுமே.
2. உம்முடைய வஸ்திரத்தின் ஓரம் தொடவே வந்தேன் சொஸ்தம் ரூடவ்யும் ரட்சகரின் சத்துவத்தை நம்பினேன் அச்சம் நீக்கும் திவ்யவாக்கை அன்பால் பொங்கிச் சொன்னீரே ஆ! கர்த்தாவே நல்ல சீரை அனுக்ரகம் செய்யுமே.
3. ஏழைப் பாவி செய்த ஜெபம் கேட்டுப் பாவம் போக்கினீர் சுத்தமாக்கி உம் சமீபம் என்னைச் சேர்த்து அணைத்தீர் அதால் பயபக்தியாக ஸ்தோத்திரம் செலுத்துவேன் உம்மையே புகழ்ச்சியாக வாழ்த்தல் சொல்லி ஏத்துவேன்.