ஆ இன்ப நேசர் இயேசுவின்
aa inba nesar yesuvin
ஆ இன்ப நேசர் இயேசுவின் அதிசய அன்பிதாம் பார்த்திடாயோ கல்வாரியில்
1. பாவ உலகத்தின் காட்சி பார்த்தே மனம் பதைத்துருகி எந்தனை மீட்கவே சொந்த உதிரத்தைச் சிந்தி மீட்டவரே – ஆ, ஆ
2. நாடிய உமதன்பில் தவறேன் தேடிய நன்மையை மறவேன் பாடியே தோத்திரம் கோடியுகங்களாய் ஏற்று வேனுமக்கே – ஆ, ஆ
3. ஆத்தும வேதனையாலே அழுதே புலம்பிய தூயர் ஆவலுடன் சேரும் தேசமதிலுமென் பங்கை ஈந்திட்டீரே – ஆ, ஆ
4. ஓட்டம் ஜெயத்துடன் ஓடி ஒளியாம் ஜீவனே சுவைப் போல் வீசும் ஒளியதில் வீரமாய் நடந்தோர் கிரீடம் சூடிடுவார் – ஆ, ஆ
5. மாறாத அன்பின் சொரூபி மாவாதையாலெமை வென்றீர் கொல்கொதாவில் ஜெயம் அல்லேலூயா துதி ஆசை நேசருக்கே – ஆ, ஆ