ஆ என்ன நேசம்
aa enna nesam
ஆ! என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம் -2 அதில் கொண்டேன் விசுவாசம் - மா சந்தோஷம் -2
பூமான் ஏசுவின் பொற்பதி வாசம் -2 புரிந்திடும் எமக்கதுவே - மா சந்தோஷம் -2
மாமலை சிகரத்தில் மகிழ்ந்து நின்று நான் - 2 தாழ்வரை யாவும் காண்கிறேன். பாலும் தேனும் பொங்கி பாய்ந்திடும் நதியும் -2 பரதேசி நான் காண்கிறேன் அதன் கனியும் -2
தேவ அருள் பெற்று சிறக்கின்ற நாடு -2 ஜீவ கனிகளோடு நீதிபரன் தங்கும் நல் மோட்சவீடு - 2 நீடூழி வாழலாம் ஆறுதலோடு -2
மரணத்தை கடப்பேன் மகிமை நாடடைவேன் -2 மகிழ்ந்தங்கு வாழ்ந்திடுவேன் தரணியில் தரியேல் தரணியில் ஊழியன் -2 பரமனின் நற்பங்கை நான் பெறுவேன் -2
இயேசுயென் தேவே இரங்கி இப்போதே -2 தாசனை ஏற்றுக் கொள்ளவே பாசமாய் என்னிலுள்ள பாவங்கள் போக்கி -2 பரிசுத்தனாய் ஆக்கிடும் மாண்புடன் தூக்கி -2