ஆ என் தலை தண்ணீரும்
aa en thalai thanneerum
ஆ! என் தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும் மாறினால் நலமாகும்
1. ஆ அழியும் நம் ஜனம் நிமித்தம் நாம் இராப்பகல் அழுதால் அது நலமாகும் கண்கள் முன் நம் தேசம்
2. ஆ! மக்கள் கண்களிலே கண்ணீராய் சொரிந்திடவே இமைகளில் ஓடிடுமே அவர்களும் வந்திடுவார்
3. எத்தனையாய்ப் பாழானோம் மிகவும் நாம் கலங்கினோம் தேசத்தின் வியாகுலம் சீயோனே புலம்பிடு
4. ஆத்துமா பாரமுடன் அன்பில் நிறைந்தவராய் அன்பர் சித்தம் புரிய இப்பொழுதே ஏகிடுவோம்
5. நன்றியில்லாதவராய் துரோகிகள் துணிகரராய் சிற்றின்பப் பிரியர்களாய் போனார்கள் தேவ ஜனம்
6. கடைசி நாட்களில் கொடிய காலமிதுவே அக்கிரமம் மிகுந்திடுதே அன்பும் தணிந்திடுதே